நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்

புதுடெல்லி: 

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட உள்ளார். வெற்றிக்கு பின் தலித், ஒபிசி மற்றும் முஸ்லிம் சமூகங்களிலிருந்து 3 துணை முதல்வர்களை நியமிக்கும் அறிவிப்பும் வெளியாக உள்ளது.

பாஜக தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி. தேசிய அளவிலான இக்கூட்டணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), திமுக உள்ளிட்ட சுமார் 25 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், பிஹாரில் இண்டியா, ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி எனும் பெயரில் போட்டியிடுகிறது. பிஹாரின் முக்கிய எதிர்கட்சியான ஆர்ஜேடியின் தலைவராக லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ் உள்ளார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக, மெகா கூட்டணி தனது முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துகிறது. முதல்வர் வேட்பாளராக உள்ள தேஜஸ்வி யாதவுடன் வெற்றிக்குபின் மூன்று துணை முதல்வர்கள் அமர்த்தவும் மெகா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

இம்மூன்று துணை முதல்வர்களையும் தலித், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் முஸ்லிம் சமூகங்களிலிருந்து தேர்வு செய்யவும் முடிவாகி உள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset