
செய்திகள் மலேசியா
தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அநாகரிகமாகும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது அநாகரிகமான செயலாகும்.
சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.
ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியின் தேசியக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சஞ்ஜீவன் தீபாவளி பெருநாளை முன்னிட்டு
ஜெராம் பாடாங்கில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி தலைமையிலான மாநில அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜெம்பூல் நகராண்மைக் கழகம் நியாயமற்ற காரணங்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை தடுக்க முயல்கிறது.
குறிப்பாக கூடாரங்கள் அமைப்பதையும் பொது இடங்களைப் பயன்படுத்துவதையும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜெம்பூல் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கை எனக்கு பெரும் அதிருப்தியை கொடுக்கிறது.
காரணம் தீபாவளியை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக மக்கள் தான் பயனடைய உள்ளனர்.
இருந்தாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் தான் இதுபோன்ற தடைகள் ஏற்படுகிறது.
நெகிரி செம்பிலானில் எதிர்கட்சியாக இருக்கும் தேசியக் கூட்டணி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும் அது மக்களுக்கான நிகழ்ச்சியாகும்.
ஆக இதுபோன்ற நிகழ்ச்சிகளை யாரும் தடுக்கக் கூடாது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2025, 6:00 pm
சபா மாநிலத் தேர்தலில் இளம் வேட்பாளர்களையும், புதிய முகங்களையும் தேசிய முன்னணி நிறுத்தும்: ஜாஹித்
October 9, 2025, 5:59 pm
இந்த உலகில் மரண தண்டனை இருக்கக்கூடாது: கஸ்தூரி பட்டு
October 9, 2025, 5:58 pm
கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்துதல் அவசரமாக, வெறும் 3 நாட்களில் முடிக்கப்பட்டது: அமைச்சர்
October 9, 2025, 5:53 pm
மித்ரா திட்டங்கள் இன்னும் நிதி வழங்கும் பணியில் உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
October 9, 2025, 1:31 pm