நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்துதல் அவசரமாக, வெறும் 3 நாட்களில் முடிக்கப்பட்டது: அமைச்சர்

கோலாலம்பூர்:

கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்துதல் அவசரமாக, வெறும் 3 நாட்களில் முடிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1960 (சட்டம் 486) இன் கீழ் கம்போங் சுங்கை பாருவை உள்ளடக்கிய வர்த்தமானிக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான முடிவு அவசரமாக எடுக்கப்பட்டது.

இன்று இங்குள்ள மக்களவையில் நடைபெற்ற கம்போங் பாரு மேம்பாட்டுத் திட்ட விளக்க அமர்வில் பிரதமர் துறை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அடுக்குமாடி குடியிருப்புகள், நிலங்கள் உட்பட நிலத்தை கையகப்படுத்துவதற்கான விண்ணப்பத்தை மேம்பாட்டாளர் கூட்டரசுல் பிரதேச அமைச்சிடம் சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அவசரமாக ஒப்புதல் அளித்ததன் மூலம் அனைத்து நிலமும் டெவலப்பரின் சொத்தாக மாறியது குறித்து, அப்போதைய கூட்டரசுப் பிரதேச அமைச்சரான டான் ஸ்ரீ அனுவார் மூசாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset