நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ரா திட்டங்கள் இன்னும் நிதி வழங்கும் பணியில் உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

2025ஆம் ஆண்டிற்கான மித்ராவின் அனைத்து திட்டங்களும் இன்னும் பணம் வழங்கும் பணியில் உள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மக்களவையில் தெரிவித்தார்.

இன்று வரை மித்ராவுக்கு இந்திய சமூக சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த ஒதுக்கீடு 60.34 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் தற்போது நிதி வழங்கும் நிலையில் உள்ளன.

மேலும் அவை நவம்பர் 2025 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிள்க நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரமணன் கூறினார்.

இந்திய சமூகம் நியாயமான, சமமான, நிலையான வளர்ச்சியின் பலன்களைத் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக, 2025 ஆம் ஆண்டிற்கான மீதமுள்ள ஒதுக்கீடுகளுக்கான பல மூலோபாய முயற்சிகளை செயல்படுத்துவதை அரசாங்கம் மேம்படுத்தி மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, 2025 பட்ஜெட் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மித்ராவிற்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.

என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்குமாறு கணபதிராவ் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset