நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்

பெங்களூரு: 

கர்நாடகம் மாநிலம் தும்கூரில் மார்கோனஹள்ளி அணை திடீரென திறக்கப்பட்டபோது அங்கு ஓடை நீரில் விளையாடிக் கொண்டிருந்த 6 பேர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

தும்கூரின் பிஜி பால்யா பகுதியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் மார்கோனஹள்ளி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்களில் குழந்தைகள் உள்பட 7 பேர் அணையின் ஓடையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அணையின் நீர்மட்டம் அதிகரித்து திறக்கப்பட்டதில் 7 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நவாஸ் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த மீதமுள்ள 4 பேரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

நீர் மட்டம் அதிகரிக்கும்போது மதகுகள் தானாக திறக்கும் தொழில்நுட்பம் அணையில் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset