நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் உள்ள 5 தங்குமிடப் பள்ளிகளில் 514 இன்ஃப்ளூயன்ஸா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன

கோத்தாபாரு:

கிளந்தானில் உள்ள 5 தங்குமிடப் பள்ளிகளில் 514 இன்ஃப்ளூயன்ஸா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கிளந்தான் சுகாதார துறை இயக்குநர் டாக்டர் ஜைனி ஹுசின் இதனை கூறினார்.

இன்ஃப்ளூயன்ஸா ஒரு லேசான நோயாகும். பொதுவாக ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும்.

இருந்தாலும் 40ஆவது தொற்றுநோயியல் வாரத்திலிருந்து மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

இதுவரை, எந்த நோயாளியும் வார்டில் அனுமதிக்கப்படவில்லை அல்லது கடுமையான சிக்கல்களை சந்தித்ததில்லை.

இருப்பினும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் அதிகரிப்பு சமூகத்தில் தீவிரமாக பரவுவதைக் குறிக்கிறது  என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset