நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

23 ஜிஎஸ்எப் தன்னார்வலர்களுக்கு புதிய கைத்தொலைபேசிகளை ஃபஹ்மி அன்பளிப்பாக வழங்கினார்

சிப்பாங்:

23 ஜிஎஸ்எப் தன்னார்வலர்களுக்கு புதிய கைத்தொலைபேசிகளை தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி அன்பளிப்பாக வழங்கினார்.

காசாவிற்கான குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா  மனிதாபிமானப் பணியில் 23 மலேசியர்கள் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் படையின் சவால்களில் இருந்து மீண்ட அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

இந்நிலையில் 23 மலேசிய தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிய கைத்தொலைபேசிகள் வழங்கப்பட்டது.

தன்னார்வலர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும் தொடர்பு மற்றும் தனிப்பட்ட விஷயங்களை எளிதாக்குவதற்கும்,

டிஜிட்டல் தொடர்பு சேனல்கள் மூலம் தங்கள் அனுபவங்களையும் பணித் தகவல்களையும் தொடர்ந்து திறம்படப் பகிர்ந்து கொள்ள உதவுவதற்கும் இந்த அன்பளிப்பு நோக்கம் கொண்டதாக ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset