நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேப்டன் பிரபா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் 13 உறுப்பினர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது

சிப்பாங்:

உகேப்டன் பிரபா கேங் என்று அழைக்கப்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 பேர் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஓத்மான் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130வி (1) இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன,

குற்றம் சாட்டப்பட்டால் ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அவர்கள் அனைவரும் சொஸ்மா சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு இன்றுடன் 28ஆவது நாள் ஆகிறது.

கைதான ஒவ்வொருவரும் டிசம்பர் 2023 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 11 வரை ஜாலான் மஹாங், கம்போங் சுங்கை ஜரோம், ஜெஞ்சாரோம், கோலா லங்காட்டில் உள்ள ஒரு செம்பனை தோட்டத்தில் கும்பல் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

அனைத்து குற்றச்சாட்டுகளும் அவர்களுக்கு தமிழில் வாசிக்கப்பட்டன.

குற்றச்சாட்டுகள் குறித்த தங்கள் புரிதலை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஆனால் வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset