நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர்: சநாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என கூக்குரல்

புது டெல்லி: 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது 71 வயதான வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீசினார்.

அப்போது, சநாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் முழக்கமிட்டார்.

எனினும் இந்த செயலுக்கு செவி சாய்க்காத தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை தொடர்ந்தார்.

அப்போது, "இதுபோன்ற சம்பவங்களால் கவனம் சிதற வேண்டாம். இது எங்களைப் பாதிக்கவில்லை. எங்களின் கவனமும் சிதறவில்லை' என்று தயக்கமுமின்றி கூறினார்.

ராகேஷ் கிஷோரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் மீது புகார் அளிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும், ராகேஷுக்கு வழக்கறிஞர் சங்கம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவ உத்தரவிடக் கோரிய வழக்கை அண்மையில் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனு என்றும் இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் சைவ வழிபாட்டில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் கஜுராஹோவில் உள்ள பெரிய சிவலிங்கத்தை வழிபடுங்கள் எனத் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset