நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கையெழுத்தில் உள்ள இரத்தம் ஷாரா கைரினாவின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது

கோத்தா கினபாலு:

கையெழுத்தில் உள்ள இரத்தம் ஷாரா கைரினாவின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது.

மறைந்த ஷாரா கைரினா மகாதீரின் கையெழுத்து கொண்ட ஒரு தாளில்  இரத்தக் கறைகள் காணப்பட்டது.

இது 13 வயது இளம் பெண்ணின் டிஎன்ஏ சுயவிவரத்துடன் ஒத்துப்போவதாக இன்று மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசிய வேதியியல் துறையைச் சேர்ந்த வேதியியலாளர் நோர் ஐடோரா சேடன்,

'Y8' எனக் குறிக்கப்பட்ட காகிதத்தில், Y8(ii) முதல் Y8(vii) வரையிலான பகுதிகளையும், 'Y1' எனக் குறிக்கப்பட்ட காகிதத்தில், Y1(i), Y1(ii) வரையிலான பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கூறினார்.

டிஎன்ஏ ஒப்பீட்டிற்காக மாதிரி பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இரத்தக் கறைகள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறது.

'WK37' எனக் குறிக்கப்பட்டு ஷாரா கைரினா பிந்தி மகாதிர் என்று பெயரிடப்பட்ட எலும்பு மாதிரியிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ விவரக்குறிப்புடன் பொருந்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset