நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவுவதற்காக 284.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: ஜாஹித்

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவுவதற்காக 284.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

2025/2026 வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்னதாக, பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி விநியோகிக்கும் செயல்முறையை விரைவாகவும், அதிகாரத்துவம் இல்லாமல், ஒழுங்கான முறையிலும் செய்யப்பட வேண்டும்.

இதை   உறுதி செய்வதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் நன்மை பயக்கும் பண உதவி, கட்டண பொறிமுறையில் மேம்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

மேம்பாட்டு முயற்சியின் மூலம், தற்காலிக வெளியேற்ற மையம் மூடப்பட்ட ஒரு நாள் முதல் மூன்று நாட்களுக்குள் பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும் என்று கூறினார்.

தற்காலிக நிவாரண மையங்களுக்கு பதிவு செய்யப்பட்ட அல்லது இடம் பெயர்ந்த குடும்பத் தலைவர்களுக்கு விநியோகிக்க, மாநில செயலாளர் அலுவலகம் அல்லது மாநில கூட்டாட்சி மேம்பாட்டு அலுவலகம் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் 284.8 மில்லியன் ரிங்கிட் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset