நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை: கல்வியமைச்சு

புத்ராஜெயா:

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20, திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்படவுள்ளது.

இக்கொண்டாட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நல்ல செய்தியாக கல்வி அமைச்சு கூடுதல் விடுமுறையை அறிவித்துள்ளது.

2025/2026 அமர்வுக்கான கல்வி நாட்காட்டியின் குறிப்பின் அடிப்படையில், சரவா தவிர நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கூடுதல் விடுமுறை பொருந்தும்.

இதில் பள்ளி ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் தீபத் திருவிழாவைக் கொண்டாட வாய்ப்பளிக்கும்.

மேலும் ஏ பிரிவில் உள்ள கெடா, கிளந்தான், திரெங்கானுவில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 19 (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபர் 21 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும்.
பி பிரிவில் உள்ள மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான், கூட்டரசுப் பிரதேசம், புத்ராஜெயா ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 21, அக்டோபர் 22ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும்.

இதற்கிடையில் சரவாக்கில் அக்டோபர் 20 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டுமே விடுமுறை இருக்கும்.

இதன் மூலம், பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும் என கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset