நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உருது மொழி பயன்படுத்தியதற்காக சேனல்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்?

புது டெல்லி: 

உருது மொழியை அதிகளவு பயன்படுத்தியது தொடர்பாக ஹிந்தி செய்தி சேனல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு அவசரமாக மறுத்துள்ளது.

 'ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட செய்தி நிகழ்ச்சிகளில் அதிகளவு உருது மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பார்வையாளர் புகார் அளித்துள்ளனர். உங்களின் நடவடிக்கை விதிமுறைகளை மீறிய செயலாக இது கருதப்படுகிறது' என ஹிந்தி சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து இந்திய பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு கூறுகையில், ஊடக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் ஹிந்தி ஊடக நிறுவனங்களில் ஒளிப்பரப்பான செய்திகள் தொடர்பாக பார்வையாளர் ஒருவர் அளித்த புகாரை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பியது மட்டுமே எங்களது பணி. இது, அமைச்சகத்தின் உத்தரவு அல்ல என தெளிவுபடுத்தியது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset