செய்திகள் இந்தியா
கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு கேரள அரசும் தடை
திருவனந்தபுரம்:
மத்தியப் பிரதேசத்தில் சிந்த்வாரா மாவட்டத்தில் 11 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு கேரள அரசும் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற ஆய்வில், குழந்தைகளின் சிறுநீரகத் திசுக்களில் டை எத்திலீன் கிளைசால் என்ற வேதிப்பொருள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும். இவை பெரும்பாலும் பெயிண்ட், மை போன்ற பொருட்கள் தயாரிக்க இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இவை சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது..
இந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தின் ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருவதால் அங்கும் அதி்காரிகள் விசாரணை நடத்தி தொழிற்சாலையை மூடினர்.
இந்த மருந்து விநியோகத்துக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதித்தன.
தற்போது கேரள அரசும் தடை விதித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
