செய்திகள் இந்தியா
ஐயப்பன் கோயில் தங்க தகடுகள் எடை குறைந்த விவகாரம்: கேரள பேரவையில் அமளி
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்துக்கு பதிலளிக்கக் கோரி கேரள மாநில பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
கேரள ஐய்யப்பன் கோவிலில், கருவறைக்கு முன்பாக உள்ள இரு துவாரபாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில், 4 கிலோ அளவுக்கு தங்கம் குறைந்ததாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கேரள சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதற்கு பொறுப்பேற்று தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 9:03 pm
மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?: உமர் அப்துல்லா கேள்வி
July 13, 2026, 3:24 pm
வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
