நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா லிட்டல் இந்தியாவில் தீபாவளி சந்தை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கும்: டத்தோ ஷண்முகம்

மலாக்கா:

தித்திக்கும் தீபாவளியை வரவேற்போம், குதூகலமாய் கொண்டாடுவோம் என்ற சிந்தனையோடு இவ்வாண்டு மலாக்கா டத்தோ பெண்டாஹாரா லிட்டல் இந்தியாவில் தீபாவளி அதிரடி சந்தை அக்டோபர் 15 ஆம் அன்று அதிகாரப்பூர்வமாக துவக்கம் காண்கிறது.

முந்தைய ஆண்டுகளைப் போல இல்லாமல் இவ்வாண்டு வியாபாரிகளுக்கு சிறப்பு விலையில் கடைகள் வாடகைக்கு விடப்படுகிறது.

நிகழ்வுக்கு முத்தாய்ப்பாக அக்டோபர் 17ஆம் தேதி அன்று மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரவுப் யூசோப் லிட்டல் இந்தியாவிற்கு சிறப்பு வருகையளிக்கிறார்.

லிட்டல் இந்தியாவில் மக்களுடன் இணைந்து அவரும் தீபாவளி சந்தையில் கலந்து சிறப்பிப்பதாக மாநில மஇகா தலைவரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஷண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்தாண்டு இந்த தீபாவளி சந்தையில் கிட்டத்தட்ட 30,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், அதிர்ஷ்டக் குலுக்கல், பாரம்பரிய இந்திய நடனங்கள் என பலதரப்பட்ட நிகழ்வுகள் உள்ளடக்கியுள்ளது.

ஆக மலாக்கா மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் இந்த தீபாவளி சந்தைக்கு கலந்து சிறப்பிக்குமாறு டத்தோ ஷண்முகம் வரவேற்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset