நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை

புது டெல்லி:

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பக NCRB வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2023ம் ஆண்டு 1,71,418 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

அதில் 10,786 பேர் விவசாயத்தில் ஈடுபட்டவர்கள்.  மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 38.5 சதவீத தற்கொலைகள் நடைபெற்றுள்ளன.

கர்நாடகத்தில் 22.5 சதவீதம், ஆந்திரத்தில் 8.6 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 7.2 சதவீதம், தமிழ்நாட்டில் 5.9 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

இந்த புள்ளிவிவரத்தை வைத்து பார்க்கும்போது இந்தியாவில் சராசரியாக தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset