நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முறையான ஏற்பாடுகள் இல்லாததால் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையின் சிறு வியாபாரிகள் பாதிப்பு: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

முறையான ஏற்பாடுகள் இல்லாததால் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையின் சிறிய வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இதனை கூறினார்.

இம்முறை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி கடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா முக்கிய சாலையில் ஏன் கடைகளை அமைத்தனர் என்று எங்களுக்கு தெரியவில்லை.

ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கும் வேளையில் இந்த கடைகளால் மேலும் மிக மோசமான  நெரிசல் ஏற்படும்.

உடல்பேறு குறைந்தவர்களுக்கு இம்முறை கடைகள் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு கடைகள் கொடுக்கப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.

உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்து மற்றவர்களுக்கு கடைகள் கொடுத்தது ஏன் என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.

கூட்டரசுப் பிரதேச முன்னாள் துணை அமைச்சர்களாக இருந்த டத்தோஸ்ரீ எம், சரவணன் அல்லது என்னையும் அழைத்து பேசி என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டு இருக்கலாம்.

அதையும் செய்யவில்லை. ஒரு பகுதி ரோட்டை அடைத்து கடைகளை அமைத்து கொடுத்துள்ளது முறையல்ல என்று அவர் சொன்னார்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. அனைத்தையும் முறை படுத்துங்கள்.

முறையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏழு வாய்ப்பில்லை என்று அவர் சொன்னார்.

விடுபட்டு போனவர்களுக்கு கடைகளை ஏற்படுத்தி கொடுங்குகள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கடை விவகாரம் பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று களம் இறங்கினர்.

விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன், பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், சிகாம்பூட் தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset