செய்திகள் இந்தியா
இந்தியாவில் குழந்தைகள் மரணத்துக்கு இருமல் சிரப் காரணமா? - 19 ஆலைகளில் ஆய்வு தீவிரம்
புதுடெல்லி:
மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, ஆறு மாநிலங்களில் உள்ள இருமல் சிரப் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்கும் 19 உற்பத்தி நிலையங்களில் மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான (CDSCO) ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானில் ஒரு குழந்தை என 12 குழந்தைகள் இருமல் சிரப் உட்கொண்டதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, மருந்துகளின் தரத்தில் குறைபாடுகளை கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான செயல்முறையை பரிந்துரைக்கும் நோக்கில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) ஆய்வுகள் நேற்று (அக்டோபர் 3) தொடங்கியது.
மேலும், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் இறப்புகளுக்கான காரணத்தை கண்டறிவதற்கு தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட பலதரப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு, பல்வேறு மாதிரிகள் மற்றும் காரணிகளை பகுப்பாய்வு செய்து வருகிறது.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் பரிசோதிக்கப்பட்ட ஆறு மருந்து மாதிரிகளிலும், மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (MPFDA) பரிசோதிக்கப்பட்ட மூன்று மருந்து மாதிரிகளிலும் கடுமையாக சிறுநீரகத்தை பாதிக்கும் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) மற்றும் எத்திலீன் கிளைக்கால் (EG) மாசுபாடுகள் இல்லாதது கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
