
செய்திகள் மலேசியா
டிரம்பின் வருகை, நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா விவகாரங்களுக்கு பொறுப்பேற்று அன்வார் பதவி விலக வேண்டும்: ஹம்சா
கோலாலம்பூர்;
டிரம்பின் வருகை, நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா ஆகிய விவகாரங்களுக்கு பொறுப்பேற்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை தெரிவித்தார்.
நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை எதிர்த்து
எதிர்க்கட்சியினர், மக்கள் தலைநகரில் கூடியுள்ளனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய ஹம்சா,
நாட்டில் நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை இயற்றப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதே வேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் மலேசியாவுக்கு வருகை தருவதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
ஆக இவ்விரு பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும்.
மேம்பாட்டாளர்களின் நலன்களுக்காகப் பிரதமர் போராடக் கூடாது.
மேலும் டொனால்ட் டிரம்பிற்கு நாட்டின் அழைப்பை அன்வார் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2025, 12:40 pm
பொந்தியானில் திடீர் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை
October 5, 2025, 12:39 pm
தமிழ், சீன, தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கு இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு கல்வியாளர் பயிற்சி பட்டறை
October 5, 2025, 12:38 pm
அமராவதி நகர்த் திட்டத்தில் முதலீடு செய்ய மலேசிய முதலீட்டாளர்கள் ஆர்வம்
October 5, 2025, 10:55 am
தொழில்துறை பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதல் ஒரு பழைய சம்பவம்: மனிதவளத் துறை
October 5, 2025, 10:51 am
அமைச்சர்களான பிறகும் சமூக ஊடக பயன்பாட்டில் தலைவர்கள் தேர்ச்சி பெறவில்லை: துணைப் பிரதமர் ஜாஹித்
October 4, 2025, 9:40 pm