
செய்திகள் மலேசியா
இந்திய முஸ்லிம் பள்ளிவாசல், சூராவ், மதரசா பொறுப்பாளர்களுக்கு GEPIMA ஏற்பாட்டில் ஒரு நாள் மாநாடு: பிரதமர் துறை அமைச்சர் கலந்துகொள்கிறார்
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள 27 இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள், 54 மதரசாக்கள், ஏறக்குறைய 30 சூராவ்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வருகின்ற சனிக்கிழமை அக்டோபர் 11ஆம் நாள் காலை 8:00 முதல் மாலை 4:00 மணிவரை புத்ரா ஜெயாவில் உள்ள Tuanku Mizan Zainal Abidin பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஷேக் தாவுது அல் ஃபத்தோனி அரங்கத்தில் மாநாடு ஒன்று நடைபெற உள்ளது.
பிரதமர் துறை இஸ்லாம் சமய நலத்துறை அமைச்சர் செனட்டர் டத்தோ செத்தியா டாக்டர் ஹாஜி முஹம்மத் நயீம் பின் ஹாஜி முக்தார் சிறப்பு வருகை தரவுள்ள இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கோரிக்கைகளை இந்த கூட்டத்தில் வைக்க இருக்கிறோம் என்று மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் மகளிர் அமைப்பின் (GEPIMA) நிறுவனரும் ஆலோசகருமான முஹம்மது பின் காதர் அலி, செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.
ஏறக்குறைய முழு நாள் மாநாட்டு அளவில் நடைபெற இருக்கின்ற இந்த சந்திப்பின்போது பள்ளிவாசல்கள், சூராவ்கள், மதரசாக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல் தொடர்பில் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒரு நாள் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புகின்ற வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இது குறித்த மேல் விவரத்திற்கும் முன்பதிவிற்கும் கெபிமா தலைமையகம் (03-40217445) அல்லது 012-3136250 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2025, 12:40 pm
பொந்தியானில் திடீர் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை
October 5, 2025, 12:39 pm
தமிழ், சீன, தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கு இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு கல்வியாளர் பயிற்சி பட்டறை
October 5, 2025, 12:38 pm
அமராவதி நகர்த் திட்டத்தில் முதலீடு செய்ய மலேசிய முதலீட்டாளர்கள் ஆர்வம்
October 5, 2025, 10:55 am
தொழில்துறை பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதல் ஒரு பழைய சம்பவம்: மனிதவளத் துறை
October 5, 2025, 10:51 am
அமைச்சர்களான பிறகும் சமூக ஊடக பயன்பாட்டில் தலைவர்கள் தேர்ச்சி பெறவில்லை: துணைப் பிரதமர் ஜாஹித்
October 4, 2025, 9:40 pm