நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜிஎஸ்எப் தன்னார்வலர்கள் இஸ்தான்புல்லில் சிகிச்சைகளை பெற்றனர்; விரைவில் நாடு திரும்புவர்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

புத்ராஜெயா:

ஜிஎஸ்எப் தன்னார்வலர்கள் தற்போது  இஸ்தான்புல்லில் சிகிச்சைகளை  பெற்றனர். அவர்கள் விரைவில் நாடு திரும்புவர்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) மனிதாபிமானப் பணியில் ஈடுபட்ட மலேசியர்களுக்கு இப்போது விரிவான சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் உளவியல் அம்சங்கள் உட்பட உதவிகள் வழங்கப்பட்டன.

துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு அவர்கள் வந்தவுடன் சுகாதாரப் பரிசோதனைகள், உதவிகள் வழங்கப்பட்டன.

இஸ்தான்புல்லில் உள்ள வெளியுறவு அமைச்சால் இயக்கப்படும் அரசு இயந்திரம், விரைவில் அவர்களை மலேசியாவிற்கு மீண்டும் அழைத்து வருவதற்கான ஒரு சுமூகமான செயல்முறையை உறுதி செய்யும்.

மலேசியர்கள் வீடு திரும்பும் அனைத்துப் பயணங்களும் அல்லாஹ்வால் எளிதாக்கப்பட்டுப் பாதுகாக்கப்படட்டும் என்று அவர்  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset