நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியினர், மக்கள் தலைநகரில் கூடினர்

கோலாலம்பூர்:

நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை மசோதாவை ரத்து செய்யக் கோரி சோகோ பேரங்காடி வளாகத்தின் முன் மக்கள் திரண்டனர்.


பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் கருப்புச் சட்டைகளை அணிந்திருந்தனர்.

மேலும் சட்ட மசோதாவை எதிர்ப்போம் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகள் வைத்திருந்தனர்.

குறிப்பாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா தன்னார்வலர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், இந்த மாத இறுதியில் தலைநகரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வந்திருப்பதை அவர்கள் எதிர்த்தனர்.

காசாவிற்கு உதவி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்காக பிரார்த்தனை செய்வதுடன் கூட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset