செய்திகள் இந்தியா
இந்தியத் தலைநகரில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை தெருநாய்கள் கடித்தன
புதுடெல்லி:
12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக டெல்லி வந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களை தெருநாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய ஓட்டப்பந்தய பயிற்சியாளர் டென்னிஸ் மவான்சோ மற்றும் ஜப்பானைச் சேர்ந்த உதவி பயிற்சியாளர் மீகோ ஒகுமட்சு ஆகியோர் இன்று காலை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களை தெருநாய்கள் கடித்துள்ளன.
இதுகுறித்து கென்ய அணியின் மருத்துவர் மைக்கேல் ஒகாரோ கூறும்போது, “இந்த சம்பவம் காலை 9:30 மணியளவில் நடந்துள்ளது. டென்னிஸுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. உலக சாம்பியன்ஷிப் போன்ற ஒரு உலகளாவிய நிகழ்வில், இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய கவலைக்குரிய அறிகுறியாகும். இந்த நேரத்தில் டென்னிஸைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
ஜப்பான் அணியின் உதவி பயிற்சியாளர் மீகோ ஒகுமட்சு இது பற்றி கூறும்போது, “காலையில் ஒரு நாய் என்னைக் கடித்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மருத்துவக் குழு எனக்கு விரைந்து முதலுதவி செய்தனர்” என்று தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025 ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு நாய்க்கடி சம்பவங்களும் நடைபெற்ற இடத்திற்கு அருகில் தெருநாய்களுக்கு தனிநபர்கள் தொடர்ந்து உணவளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் டெல்லியில் 25,210 நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டில் 17,847 ஆக இருந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் கிட்டத்தட்ட 3,200 நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் தெருநாய்களின் எண்ணிக்கை 8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
