நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனை; அக்டோபர் 8ஆம் தேதி நிறைவேற்றப்படவுள்ளது: சகோதரி

கோலாலம்பூர்:

மலேசியரான பன்னீர் செல்வம் புதன்கிழமை காலை (அக்டோபர் 8) சிங்கப்பூரில் 51.84 கிராம் போதைப் பொருளை சிங்கப்பூருக்கு கடத்தியதற்காக தூக்கிலிடப்பட உள்ளார்.

மரணத் தண்டனை தேதி குறித்த அறிவிப்பு குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதாக சிறை அதிகாரிகள் இன்று தனக்குத் தெரிவித்ததாக அவரது சகோதரி ஏஞ்சலியா  தெரிவித்தார்.

அக்டோபர் 4 தேதியிட்டு சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் மூத்த அதிகாரி கையொப்பமிட்ட அந்த அறிவிப்பில்,

குடும்ப உறுப்பினர்கள் அக்டோபர் 7 ஆம் தேதி வரை சாங்கி சிறை தொடர்பு மையத்தில் நீட்டிக்கப்பட்ட தினசரி வருகைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே குடும்ப வழக்கறிஞர் என். சுரேந்திரனைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.

மேலும் நடவடிக்கை குறித்து கேட்டபோது, ​​முடிவு எடுக்கப்பட்டவுடன் குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் அறிவிப்பதாக அவர் கூறினார்.

கடந்த 2014 செப்டம்பர் 3 ஆம் தேதி உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 51.84 கிராம் டயமார்பைனை விநியோகித்ததற்காக பன்னிர் செல்வத்திற்கு 2017ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேல்முறையீடு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் 2018 பிப்ரவரி 9ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது

மேலும் சிங்கப்பூர் அதிபருக்கு அவர் செய்த மன்னிப்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset