நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புந்தோங்கில் 650 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு; நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை ஒத்திவைப்பதில் பிரச்சினை இல்லை: ஙா கோர் மிங்

ஈப்போ:

நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை ஒத்திவைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

வீட்டு வசதி  ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்

சம்பந்தப்பட்ட மசோதாவை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து, அமைச்சு  தயாராக இருப்பதாகவும், மேலும் கருத்துகளையும்  கேட்கத் தயாராக இருப்பதாக  கூறினார்.

மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு அரசாங்கமாக, அமைச்சு  எப்போதும் திறந்த மனதுடன்  அணுகுமுறையை கடைபிடிக்கும்.

நாங்கள் அனைத்து தரப்பினரின் ஆக்கபூர்வமான  கருத்துக்களைக் கேட்கத் தயாராகவும் விருப்பமாகவும் இருக்கிறோம்

புந்தோங்கில் உள்ள  ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மண்டபத்தில் சுமார் 620 மாணவர்களுக்கு தீபாவளி உதவிகளை வழங்கிய பின்னர்  செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

எந்தவொரு நல்ல பரிந்துரைகளும் திறந்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும், ஏனெனில் எங்கள் நோக்கம் உண்மையானது.

நகர புற புதுபித்தல் மக்களுக்கு, குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உதவுவதற்காகவே உள்ளது.

வெள்ளிக்கிழமையன்று  கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நகர்ப்புற மறுவடிவமைப்பு தொடர்பான மாநாட்டைத் தொடர்ந்து, அனைத்து பங்குதாரர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கிய விரிவான கருத்துகள் செவிமடுத்தப் பின்னர் மசோதாவை தாக்கல் செய்வதை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 2026 பட்ஜெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த வாரம் எங்கள் முக்கிய கவனம் பட்ஜெட்டில் உள்ளது. மற்ற விஷயங்களை, பட்ஜெட்டுக்குப் பிறகு நாம் செய்யலாம். எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறினார்,

நகர்ப்புற புதுப்பித்தல் சட்டம்
மசோதா பொருத்தமான நேரத்தில் தொடரும் என்றும் கூறினார்.

நகர்ப்புற புதுப்பித்தல் சட்டம்
குறித்து மேலும் ஆலோசிக்க அமைச்சகத்திற்கு இடம் மற்றும் நேரத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து கருத்துக்களையும் ஆய்வு செய்ய நகர மற்றும் கிராம திட்டமிடல் துறைக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக ஙா கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன்,

இன்று ஈப்போ் பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  பள்ளிகளைச் சேர்ந்த  வசதி குறைந்த 620 மாணவர்களுக்கு மொத்தம் 250,000 ரிங்கிட் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதுடன் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவிற்கு ஙா கோர் மிங் 100,000 ரிங்கிட் நிதி வழங்கியுள்ள தகவலையும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset