நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நூற்றாண்டுக்கும் மேலாக சமயத் தொண்டாற்றி வரும் சிவசண்முகம் கருப்பையாவுக்கு திருமுறைசீர் பரவுவார் விருது வழங்கி கெளரவித்ததில் மகிழ்ச்சி: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நூற்றாண்டுக்கு மேலாக சமயத் தொண்டாற்றி வரும் சிவசண்முகம் கருப்பையாவுக்கு திருமுறைசீர் பரவுவார் விருது வழங்கி கெளரவித்ததில் மகிழ்ச்சி.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

ஒருவருக்கு எந்த நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

அப்படிப்பட்ட அற்புதமான ஆத்மார்த்தமான ஒரு நிகழ்ச்சியை இன்று ஏற்பாடு செய்ததில் மனம் நிறைவாக இருக்கிறது.

அரை நூற்றாண்டுக்கு மேலாக சமயத் தொண்டாற்றி வரும், எனக்கு தேவாரம் கற்றுக் கொடுத்த ஆசான்  ஐயா சிவசண்முகம் கருப்பையா அவர்களின் சமயத் தொண்டைப் பாராட்டி, தமிழ்ப்பேராயம் ஏற்பாட்டில் திருமுறைசீர் பரவுவார் விருது வழங்கி கெளரவித்ததில் மகிழ்ச்சி.

பொதுவாழ்க்கையில் போகும் வழியில் பூவைப் போட்டுப் போனோமானால் நாம் திரும்பும் போது பூவின் மேல் நடப்போம்.

ஆனால் அதுவே போகும்போது முள்ளைப் போட்டுப்போனால் திரும்பும் போது அந்த முள்ளில்தான் மிதிக்க வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சமயமும், தமிழும் இரு கண்களாய் வாழ்வோம் என்று டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset