நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: ராகுல்

புது டெல்லி: 

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேசினார்.

மேலும், இந்தியாவில் மீண்டு வர முடியாத அளவுக்கு தவறுகள் நடந்துவிட்டன. அதில் முதன்மையான பெரிய தவறு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

இருவேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு மோதலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அங்கு 17 பெரிய மொழிகள் உள்ளன. பல்வேறு மதங்கள் உள்ளன.

ஆனால், அனைவருக்கும் சமமான இடமளிக்கப்படவில்லை. ஒரே அதிகாரத் தலைமையின்கீழ் சீனா கொண்டு செல்லப்பட்டது. அதை இந்தியாவில் அமல்படுத்த முடியாது என்று ராகுல் பேசினார்.

ராகுலின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டதால் ராகுல் காந்தி தேசப்பற்றையும் இழந்துவிட்டார் என்று விமர்சித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset