நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜிஎஸ்எப் ஆர்வலர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது காட்டுமிராண்டித் தனமானது: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

ஜிஎஸ்எப் ஆர்வலர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது காட்டுமிராண்டித் தனமான செயலாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

குளோபல் சவுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) ஆர்வலர்களை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விரின் அறிக்கையை மலேசியா கண்டிக்கிறது.

அவரின் இந்த அறிக்கையை காட்டுமிராண்டித் தனமானது.

ஆயுதங்களை அல்லாமல் மனிதாபிமான உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் ஆர்வலர்கள் குறித்து இதுபோன்ற ஒரு அனுமானத்தை ஏற்படுத்தக்கூடாது.

இந்த பென் க்விர் யாருடைய குரல்? ஒரு இஸ்ரேலிய பயங்கரவாதியுடையது. எனவே அவர்களை  பெரிய பயங்கரவாதி தலைப்பைக் கொடுங்கள்.

இவர்கள் ஜிஎஸ்எப் ஆர்வலர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லவில்லை. மக்களைக் கொல்லவில்லை.

மக்களுக்கு தேவையான உணவு, பானங்கள்,  மருந்துகளைக் கொண்டு செல்கின்றனர்.

அவர்களை எப்படி பயங்கரவாதிகள் என்று நீங்கள் அழைக்க முடியும்? இது ஒரு காட்டுமிராண்டித் தனமான அறிக்கை என்று  ஊடகங்களைச் சந்தித்த பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset