
செய்திகள் மலேசியா
பத்து பகாட்டில் புயல், பலத்த காற்றினால் 56 வீடுகள் சேதமடைந்தன
பத்து பகாட்:
பத்து பகாட்டில் புயல், பலத்த காற்றினால் கிட்டத்தட்ட 56 வீடுகள் சேதமடைந்தன.
ஜொகூர் ஊராட்சி, வீட்டுவசதி ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் இதனை கூறினார்.
நேற்று மாநிலத்தின் பல மாவட்டங்களை புயல், பலத்த காற்று தாக்கியது.
இதன் காரணமாக சுமார் 56 வீடுகள் சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பத்து பகாட்டில் அதிக அளவு சேதத்தைப் பதிவு செய்தது.
இந்த சம்பவம் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து.
குறிப்பாக வீடுகளின் கூரைகள் மற்றும் உணவுக் கடைகளுக்கும் சேதம் விளைவித்ததாக அவர் கூறினார்.
இதுவரை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் 28 காவல் புகார்கள் செய்யப்பட்டுள்ளன
இதில் பத்து பகாட்டில் 15 சம்பவங்களும் டோங்காங் பெச்சாவில் 12 சம்பவஙகளும், பரித் ராஜாவில் ஒரு சம்பவங்களும் அடங்கும்.
தற்காலிக நிவாரண மையம் எதுவும் திறக்கப்படவில்லை என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2025, 4:01 pm
கைது செய்யப்பட்ட அனைத்து காசா தன்னார்வலர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: அமிரூடின் ஷாரி
October 3, 2025, 3:05 pm
இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன
October 3, 2025, 2:27 pm
காணாமல் போன இளம் பெண் ஷாமினியை கண்டுபிடிக்க போலிஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது
October 3, 2025, 2:25 pm
காசா பணியில் உள்ள மலேசிய தன்னார்வலர்களை விடுவிக்க அரசு முழு முயற்சிகளையும் எடுத்துள்ளது: பிரதமர்
October 3, 2025, 2:21 pm