
செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாமுனியின் வீடு புதுபிக்கப்பட்டது; வீடு ஆடம்பரம் அல்ல, அடிப்படை உரிமையாகும்: பிரகாஷ்
ஷாஆலம்:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாமுனியின் வீடு புதிதாக புதுபிக்கப்பட்டு வீட்டின் சாவியும் இன்று ஒப்படைக்கப்பட்டது.
கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் இதனை கூறினார்.
புக்கிட் கமுனிங் பத்து 8இல் மகாமுனி வசித்து வருகிறார். அவரின் வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக அவ்வீட்டில் யாரும் தங்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது.
இதன் அடிப்படையில் அவரின் பிரச்சினை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பலனாக அவரின் வீட்டை புதுபிக்க ஐசியூவில் இருந்து 80,000 ரிங்கிட் கிடைத்தது.
கோத்தா கமுனிங் சட்டமன்ற தொகுதி சார்பில் 15,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.
இன்னும் பலரின் ஆதரவுடன் மகாமுனியின் வீடு புதுபிக்கப்பட்டு வீட்டிற்கான சாவியும் இன்று வழங்கப்பட்டது.
மகாமுனியிடம் வீட்டு சாவியை வழங்கிய பிரகாஷ் இவ்வாறு கூறினார்.
வீட்டு சாவி வழங்கும் நிகழ்வில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுத் துறை இயக்குநர் டத்தோ ஹாஜி முகமது கிதிர் பின் மஜித், எம்பிஎஸ்ஏ மண்டலம் 14 கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வீட்டை ஆடம்பரமாகக் கருதக்கூடாது. மாறாக, அது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாக பார்க்க வேண்டும்.
மேலும் வீட்டுவசதி என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஒரு உரிமையாக இருக்க வேண்டும்.
வீடுகள் ஒரு சிலரால் மட்டுமே அடையக்கூடிய ஆடம்பரமாக இருக்கக்கூடாது.
இன்று, மாநில அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், உள்ளூர் அதிகாரிகள், சமூகம் இந்த உரிமையை ஒரு யதார்த்தமாக்க எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து ஆராய வேண்டும் என பிரகாஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2025, 4:01 pm
கைது செய்யப்பட்ட அனைத்து காசா தன்னார்வலர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: அமிரூடின் ஷாரி
October 3, 2025, 3:05 pm
இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன
October 3, 2025, 2:27 pm
காணாமல் போன இளம் பெண் ஷாமினியை கண்டுபிடிக்க போலிஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது
October 3, 2025, 2:25 pm
காசா பணியில் உள்ள மலேசிய தன்னார்வலர்களை விடுவிக்க அரசு முழு முயற்சிகளையும் எடுத்துள்ளது: பிரதமர்
October 3, 2025, 2:21 pm
நான்கு 4 டிஆர் கும்பல் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்
October 3, 2025, 2:20 pm