செய்திகள் மலேசியா
கைது செய்யப்பட்ட அனைத்து காசா தன்னார்வலர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: அமிரூடின் ஷாரி
ஷாஆலம்:
காசாவுக்கான சுமுட் புளோட்டிலா உதவி படகுப் பயண அணியில் இடம் பெற்றிருந்த மலேசியர்களை இஸ்ரேல் கைது செய்ததற்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அனைத்துலகக் கடல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தும், படகுகளில் அத்துமீறி நுழையும் இஸ்ரேலின் செயல் அனைத்துலக கடல் சட்டத்திற்கு புறம்பானதாகும்.
கடுமையான வார்த்தைகளில் இந்த கோழைத்தனமான செயலை நான் கண்டிக்கிறேன்.
கைது செய்யப்பட்ட அனைத்து தன்னார்வலர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறேன்.
ஜி.எஸ்.எப். என்பது காஸா மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை படகில் கொண்டுச் செல்லும் உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர் குழுக்களின் மனிதாபிமானப் பயணமாகும். இந்த படகுகள் இஸ்ரேலின் முற்றுகைக்கு இலக்காகியுள்ளன.
முன்னதாக, இந்த ஜி.எஸ்.எஃப். மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டுள்ள மலேசிய தன்னார்வலர்களில் ஒரு பகுதியினர் தாங்கள் இஸ்ரேலியப் படைகளால் சிறை பிடிக்கப்பட்டதை சித்தரிக்கும் அவசர காணொளிப் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
இதே போன்ற கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆயுதமற்ற சிவிலியன்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பொருள்களை ஏற்றிருந்த புளோட்டிலா மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 3:01 pm
பாலோக் கடற்கரையில் சோகம்: விடுதியிலிருந்து வெளியேறிய மாணவர் மாயம்
April 18, 2026, 2:45 pm
ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் குறித்து பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை நடத்தலாம்: பிரதமர்
April 18, 2026, 2:42 pm
பேரா மாநிலத்தில் 200 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது: டத்தோ சிவநேசன்
April 18, 2026, 2:41 pm
மஇகா இன்னும் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்புக் கட்சியாகவே நீடிக்கிறது: அஹ்மத் ஜாஹித்
April 18, 2026, 12:15 pm
உள்ளாடைகளைத் திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலிஸ் வலைவீச்சு
April 18, 2026, 12:08 pm
“85% மக்களுக்குப் பாதிப்பில்லை”: டீசல் விலை உயர்வு குறித்துப் பிரதமர் அன்வாரின் விளக்கம்
April 18, 2026, 11:56 am
புனிதப் பயணம் தொடக்கம்: மலேசிய ஹஜ் பயணிகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நெகிழ்ச்சியான வாழ்த்து
April 18, 2026, 10:47 am
