நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமெரிக்கா தடுத்ததால் மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானை தாக்கவில்லை: ப. சிதம்பரம்

புது டெல்லி: 

2008 இல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுத்ததால் மும்பை தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடங்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது தெரிவித்தார்.

ஆபரேசன் சிந்தூரை டிரம்ப் தலையீட்டால் மோடி அரசு நிறுத்தினார் என்று காங்கிரஸ் விமர்சித்து வரும்நிலையில். ப, சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.

மும்பையின் முக்கிய இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா  அமைப்பினர் நடத்திய தாக்குதலில்  166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  

அப்போதைய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ப.சிதம்பரம்  தற்போது அளித்துள்ள பேட்டியில், மும்பை தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா பரிசீலித்தது.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் மூத்த ராஜதந்திரிகளின் ஆலோசனை காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. போரை தொடங்க வேண்டாம் என்று ஒட்டுமொத்த நாடுகளும் கூறின.

என்னையும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் சந்தித்து பதிலடி தாக்குதல் அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனாலும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை என் மனதில் இருந்தது என்றார் ப.சிதம்பரம்.

- ஆர்யன்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset