நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை ஒன்றிய அரசு இன்னும் தரவில்லை: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: 

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான ரூ.260 கோடி நிதியுதவியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

வயநாட்டில் 2024 ஜூலை 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில்  200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கும் மறுகட்டமைப்புக்கும் ரூ.2,221.10 கோடி வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, ரூ.260.65 கோடி நிதியுதவி வழங்க ஒன்றிய  ஒப்புக் கொண்டது. எனினும், அந்த நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை.

வயநாடு நிலச்சரிவில் வீடிழந்தவர்களுக்காக  64 ஹெக்டேரில் புதிய நகரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரிக்குள் இத் திட்டம் நிறைவடையும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset