நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டிரம்பின் காஸா திட்ட ஒப்பந்தத்துக்கு மோடி வரவேற்பு

புது டெல்லி: 

காஸா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்துள்ள 20 அம்ச திட்ட ஒப்பந்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இருதரப்பு உறவில் பிரச்சனை ஏற்பட்டிருந்தநிலையில், தற்போது டிரம்ப்பின் திட்டத்துக்கு பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

ஹமாஸ் இஸ்ரேல் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், காஸாவில் போருக்கு பிறகு உருவாக்கப்படும் நிர்வாகத்துக்கு டிரம்ப் தலைமை தாங்குவார் என்பன உள்ளிட்ட 20 அம்ச திட்டத்தை டிரம்பும், இஸ்ரேல் அதிபர் பென்ஜமின் நெதன்யாகும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

இத் திட்டத்துக்கு எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான், துருக்கி, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவும் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், டிரம்ப்பின் இந்தத் திட்டம் பாலஸ்தீனம், இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமன்றி பரந்த மேற்காசிய பிராந்தியத்துக்கு நீண்டகால அமைதியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

மோடியின் இந்த வரவேற்பு பதிவை டிரம்ப் தனது ட்ரூத் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset