நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா - பூடான் இடையே ரயில் பாதை

புது டெல்லி: 

இந்தியா - பூடான் இடையே 89 கி.மீ. தூரத்துக்கு ரூ.4,000 கோடியில் ரயில் பாதைகள் அமைக்கப்படுகிறது.

பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் இந்தியாவின் அஸ்ஸாமின் கோக்ரஜார், மேற்கு வங்கத்தின் பனார்கத் நகரங்களுடன் இணைக்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக  தில்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ரயில் வழித்தடம் அமைக்கும் செலவை இந்தியா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.  

பூடானுடன் இந்தியாவுக்கு வலுவான வர்த்தக உறவு உள்ளது. இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி பூடான் வர்த்தகம் நடத்துகிறது.

எனவே, இந்த ரயில் இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 4 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்' என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset