நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுல் காந்தியை சுடப்போவதாக மிரட்டல்: பாஜக நிர்வாகி மீது வழக்கு

திருவனந்தபுரம்: 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி பீரன்டு மகாதேவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

மலையாள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய மகாதேவன், ராகுல் காந்தியின் மார்பில் தோட்டாக்கள் பாயும் என்றார்.

வங்கதேசம், நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய மகாதவேன், இந்தியாவில் அதுபோன்ற போராட்டங்கள் நடைபெற சாத்தியமில்லை. பெரும் போராட்டங்களை நிகழ்த்த ராகுல் எண்ணினால் அவரது மார்பில் தோட்டாக்கள் பாயும் என்றார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, ப்ரிண்டு மகாதேவனுக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset