நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லடாக்கில் 6 நாள்களாக தொடரும் ஊரடங்கு: ராகுல் கண்டனம்

புது டெல்லி: 

மாநில அந்தஸ்து கேட்டு நடத்தி போராட்டம் வன்முறையாக மாறியதால் லடாக்கின் லே மாவட்டத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு  6வது  நீடிக்கிறது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். 40 போலீஸார் உள்பட 90 பேர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையை தூண்டியதாக பருவ நிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, லடாக் வன்முறைக்கு பாஜக, ஆர்எஸ்எஸ்ஸும்தான் காரணம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அவர் வெளியிட்ட பதிவில், லடாக்கின் அருமையான கலாசாரம், பாரம்பரியத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் சிதைத்துள்ளது.

தங்கள் உரிமைக்காக போராடிய லடாக் மக்களில் 4 பேரை பாஜக அரசு கொலை செய்துள்ளது. சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லடாக் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து அவர்களின் உரிமைகளை வழங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset