செய்திகள் இந்தியா
மும்பை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான தங்கம் போதைப்பொருள் கடத்தல்: 6 பேர் கைது
மும்பை:
நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம், கடத்தல் கும்பல்களின் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்பட்ட பல்வேறு அதிரடி சோதனைகளில் சுமார் ரூ.22 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், ‘ஆபரேஷன் வீட் அவுட்’ என்ற பெயரில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த சோதனையில், 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, பாங்காங்கில் இருந்து வந்த இரண்டு இந்தியர்கள், அதைப் பெறக் காத்திருந்த ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், செப்டம்பர் 21 முதல் 24ம் தேதி வரை நடந்த பல்வேறு சோதனைகளில், பயணிகளிடமிருந்து கடத்தி வரப்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பையில் உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்த மேற்கண்ட கும்பலைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து எம்.டி.எம்.ஏ, கோகைன் போன்ற போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
