நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் நடைபெற உள்ள பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000: பிரதமர் மோடி தொடக்கம்

புது டெல்லி:

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிகாரில் 75 லட்சம் பெண்கள் சுய தொழில் தொடங்க தலா ரூ. 10,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டது.

இலவச கலாசாரம் ஜனநாயகத்துக்கு எதிரானது என கூறி வரும் பிரதமர் மோடியே இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் பா.ஜ., கூட்டணி வைத்து ஆட்சி செய்து வருகிறது.

தேர்தலை முன்னிட்டு முதல்வர் நிதீஷ் குமார் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதன்படி, குடும்பத்திற்கு ஒரு பெண் என்ற அடிப்படையில், 75 லட்சம் பெண்களுக்கு தலா, 10,000 ரூபாய் வழங்க, 7,500 கோடி ரூபாய் நிதியை நிதீஷ் குமார் அண்மையில் ஒதுக்கினார்.

இந்தத் திட்டத்தை தில்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் பெண்களுக்கு நிதி உதவி அளித்து வாக்குகளைக் கவர பாஜக - நிதிஷ் குமார் இணைந்து செயல்படுவதை பெண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் பாஜக கூட்டணியை தோல்வியடையச் செய்வார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset