நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 400 கருத்தடை

சென்னை:

சென்​னை​யில் அண்​மைக் கால​மாக தெரு நாய்​கள் தொல்​லை​யும், நாய் கடிப்​ப​தால் பரவும் ரேபிஸ் நோயால் பாதிப்​போர் எண்ணிக்​கை​யும் அதி​கரித்து வரு​கின்​றன. சில தினங்​களுக்கு முன்பு ராயப்​பேட்​டையை சேர்ந்த ஒரு​வர் ரேபிஸ் நோயால் பாதிக்​கப்​பட்டு உயி​ரிழந்​தார்.

இது​போன்ற நாய்​கள் தொல்லை தொடர்​பாக மாநகரின் பல்​வேறு பகு​தி​களை சேர்ந்த பொது​மக்​கள் கூறிய​தாவது: 

நாய் கடித்​தால் காலில் கடும் வலி ஏற்​படு​கிறது. இது தொடர்​பாக மாநக​ராட்​சி​யிடம் புகார் தெரி​வித்​தால், கால​தாமத​மாக வந்​து, நாயை பிடித்​துச் சென்​று, கருத்​தடை செய்​து, ஒரு வாரத்​துக்கு பிறகு, அதே இடத்​தில் விட்​டு​விட்​டு, எங்​கள் புகார் மீது தீர்வு கண்​டு​விட்​ட​தாக புகாரை முடித்​து​விடு​கின்​றனர். 

அந்த நாய் தெரு​வில் செல்​வோரை மீண்​டும் விரட்டி சென்று அச்​சுறுத்​துகிறது.
 
தற்போதுள்ள சட்​டங்​கள் நாய்​களுக்கு பாது​காப்பை வழங்​கு​கின்​றன. மனிதர்​களுக்கு பாது​காப்​பற்ற நிலை உள்​ளது. பெரும்​பாலான பகு​தி​களில் உள்ள நாய்​கள் கடிக்​கா​விட்​டாலும் குறைப்​பது, விரட்டி அச்​சுறுத்​து​வது அதி​க​மாக உள்​ளது.

இயற்​கை​யின் படைப்​பில் ஒவ்​வொரு உயி​ரினத்​தின் இனப்பெருக்​கத்​தை​யும் கட்​டுப்​படுத்த ஒரு உயி​ரினம் படைக்​கப்​பட்​டிருக்​கிறது. மருத்​து​வம் மற்​றும் சுகா​தா​ரத்​தில் அறி​வியல் தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் மக்​கள்​தொகை பெருக்​கமடைந்​தது போல, மக்​களோடு வாழ பழகிய தெரு நாய்​களும் பெரு​கி​விட்​டன.

மக்​களோடு வசிப்​ப​தால், மற்ற விலங்​கு​களை போல, நாய்​களுக்கு இயற்கை எதிரி இல்​லாமல் போன​தா​லும், சட்ட பாது​காப்​பும் இருப்​ப​தால் நாய்​களின் பெருக்​கம் அதி​க​மாகி​விட்​டன. இதை கட்​டுப்​படுத்​து​வ​தில், சென்னை மாநக​ராட்சி மெத்​தன​மாக உள்​ளது. தெரு நாய்​களின் அச்​சுறுத்​தலுக்​கும், மாநக​ராட்​சி​யின் கருத்​தடை அறுவை சிகிச்​சைக்​கும் தொடர்​பில்​லாமல் உள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

தற்​போதுள்ள சட்ட விதி​களின்​படி, நாய் தொல்​லை, பெருக்​கத்தை கட்​டுப்​படுத்த மாநக​ராட்சி வசம் உள்ள ஒரே ஆயுதம், இனக்​கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை மட்​டும் தான். தற்​போது மாநக​ராட்சி சார்​பில் புளியந்​தோப்​பு, மீனம்​பாக்​கம், லாயிட்ஸ் காலனி, கண்​ணம்​மாபேட்​டை, சோழிங்​கநல்​லூர் ஆகிய 5 இடங்​களில் உள்ள மையங்​களில் தெரு நாய்​களுக்கு இனக்​கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை செய்​யப்​படு​கிறது. இதன் மூலம் நாளொன்​றுக்கு 115 நாய்​களுக்கு இனக்​கட்​டுப்​பாடு செய்​யப்​படு​கிறது.

சென்​னை​யில் 1.80 லட்​சம் நாய்​கள் உள்ள நிலை​யில், ஒரே ஆண்​டில் 70 சதவீத நாய்​களுக்கு இனக்​கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை செய்​தால் மட்​டுமே நாய்​கள் பெருக்​கத்தை கட்​டுப்​படுத்த முடி​யும். அப்​படி​யெனில், தின​மும் சுமார் 400 நாய்​களுக்கு இனக்​கட்​டுப்​பாடு செய்ய வேண்​டும். அதற்​காக மேலும் 10 இடங்​களில் இனக்​கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை மையங்​களை மாநக​ராட்சி அமைத்து வரு​கிறது. ஏற்​கெனவே உள்ள மையங்​களில் அறுவை சிகிச்சை செய்​யப்​பட்ட நாய்​களை பராமரிக்க தலா 140 கூண்​டு​கள் உள்​ளன.

10 புதிய மையங்​களில் மேலும் தலா 100 கூண்​டு​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. இப்​பணி​கள் டிசம்​பருக்​குள் முடிந்​து​விடும். 2026 ஜனவரி​யில் நாளொன்​றுக்கு 400 நாய்​களுக்கு இனக்​கட்​டுப்​பாடு அறுவை சிகிச்சை செய்​யும் இலக்கை எட்​டு​வோம். அதன் பிறகு நாய்​களின் பெருக்​க​மும், தொல்​லை​யும் படிப்​படி​யாக குறை​யும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் உச்​சநீ​தி​மன்​றம் வழங்​கிய இடைக்​கால தீர்ப்​பின்​படி, ரேபிஸ் நோயால் பாதிக்​கப்​பட்ட நாய்​கள், ரேபிஸ் நோய் இருப்​ப​தாக சந்​தேகிக்​கப்​படும் நாய்​கள், ஆக்​ரோஷ​மான நாய்​களை பிரத்​யேக​மான காப்​பகத்​தில் வைத்து உரிய சிகிச்சை அளிக்க, புறநகர் பகு​தி​யில் 500 நாய்​களை வைத்து பராமரிக்​கக்​கூடிய பிரத்​யேக இடம் தேர்வு செய்​யும் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

தெரு​நாய்​களுக்கு உணவு அளிப்​ப​தற்​காக பிரத்​யேக இடத்​தை அடை​யாளம்​ காணும்​ பணி​களும்​ நடை​பெற்று வரு​கின்றன. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset