நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

193 நாடுகளில் 150 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கின்றன; இஸ்ரேலுடன் மோடி நட்பு பாராட்டுவது ஏன்?: சோனியா கேள்வி

புது டெல்லி: 

சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த இந்தியா தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் மவுனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான நட்பு வைப்பதற்கே பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றும் சோனியா புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை விமர்சித்து ஆங்கில நாளிதழில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், பிரிட்டன், கனடா, போர்சுகல், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்பட ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில் 150 நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க முன்வந்துள்ளன.  

காஸா, மேற்கு கரைப் பகுதியில் கல்வி, சுகாதாரத்துக்கு இந்தியா உதவி வந்தது. தற்போது பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து வரவேற்றுள்ளது வரலாற்றுத் தருணமாகும்.

அமைதியாக இருப்பது நடுநிலை என்பதில்லை; தவறுக்கு உடந்தை என்பதையே காட்டுகிறது.  சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் சாதிக்கிறது.

இந்தியாவின் நீண்ட கால சுதந்திர போராட்ட கொள்கைகளின் அடிப்படையில் இந்தியா தலைமையேற்று காஸா பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset