நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லடாக் வன்முறைக்கு பாஜக காரணம்: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

புது டெல்லி: 

லடாக்கில் ஏற்பட்ட வன்முறைக்கு  பாஜக அரசுதான் காரணம் என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதற்கு பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தூண்டலே காரணம் என்று ஒன்றிய அரசு குற்றஞ்சாட்டியது.  

இந்த நிலையில், வன்முறைக்கு பாஜக அரசுதான் காரணம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா  எக்ஸ் பக்கத்தில், வன்முறைக்கு ஆளும் பாஜக அரசின் தோல்வியுற்ற வாக்குறுதிகள்தான் காரணம்.

ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள், அமைதிக்கு வழிவகுக்கும் என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு உறுதி அளித்தது. ஆனால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு நிலைமை மேலும் மோசமடைந்து உள்ளது.

ஒன்றிய அரசின் குறுகிய பார்வை காரணமாக, ஜம்முவும் லடாக்கும் வன்முறையைத் தூண்டும் இடங்களாக மாறியுள்ளன. தற்போது பாஜக அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டப்பட்ட அறிக்கையில், லடாக் மக்களின் 6 ஆண்டுகளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஆகையால், வன்முறைக்கு பாஜக அரசுதான் காரணம் என்று தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset