செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் 8 இடங்களில் மின்சாரம் திருட்டு: ரூ.9.40 லட்சம் அபராதம்
சென்னை:
சென்னை கோட்டத்தில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.9.40 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை வடக்கு, சென்னை மையம், சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சோழிங்கநல்லூர் கோட்டம் சென்னை தெற்கு-2 மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 9-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மின் நுகர்வோருக்கு ரூ.9.01 லட்சம் இழப்பீட்டு தொகை விதிக்கப்பட்டது. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து சமரசத் தொகை ரூ.39 ஆயிரம் செலுத்தியதால், காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான புகார்கள், தகவல்களை சென்னை அமலாக்க செயற்பொறியாளரிடம் 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 11:53 am
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
December 15, 2025, 4:12 pm
அமித்ஷா போன்றவர்களுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?: தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி
December 14, 2025, 7:17 am
UNITED ECONOMIC FORUM - ஐக்கிய பொருளாதார பேரவையின் வர்த்தக மாநாடு
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
