நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மாநில அந்தஸ்து கோரிய லடாக் போராட்டத்தில் கலவரம்: 4 பேர் உயிரிழப்பு

லடாக்:

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்கள் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் கோரியும் நிலம், கலாச்சாரம் மற்றும் வளங்களை பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசன பாதுகாப்பு கோரியும் கடந்த 3 ஆண்டுகளாக அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார். கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அப்போது போராட்டக்காரர்கள் லடாக் மலைப்பகுதி மேம்பாட்டு தன்னாட்சி கவுன்சில் அலுவலகம், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.  இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

“இளைஞர்களின் நீண்ட நாள் கோபம் தன்னெழுச்சி போராட்டமாக மாறியுள்ளது. நாட்டில் ஸ்திரமின்மையை நாங்கள் விரும்பவில்லை என்று சோனம் கூறினார்.

லடாக் வன்முறையை சோனம் வாங்சுக்
தூண்டியதாக ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை சோனம் வாங்சுக் மறுத்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset