நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பேராசிரியர் கவியருவி தி மு அப்துல் காதருக்கு கலைமாமணி விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 

2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேராசிரியர் கவியருவி தி மு அப்துல் காதர், கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் அப்துல் காதர் தொடர்ந்து தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார். இலக்கிய பணியாற்றி வரும் பேராசிரியர் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் உயர் விருதான கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின மூலம் கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாடகர் யேசுதாஸ், நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் அனிருத், நெல்லை ஜெயந்தன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவிப்பார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset