நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாக்கு திருட்டுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் தொடர்பு: ராகுல்

புது டெல்லி: 

வாக்குத் திருட்டுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் தொடர்பு உள்ளதாக   எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மக்களவைத் தேர்தல், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ஆளும் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ராகுல் ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வாக்குத் திருட்டுக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்று அவர்  கூறினார்.
பாஜக தேர்தலில் நேர்மையான முறையில் வெற்றி பெறவில்லை. அரசமைப்பு நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, வாக்குகளைத் திருடி வெற்றி பெற்றது.

அதனால்தான் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளிலும் வினாத்தாள் கசிவதும், ஒவ்வொரு பணியாளர் தேர்வும் ஊழல் கதைகளுடன் தொடர்புள்ளதற்கும் வாக்குத் திருட்டுதான் காரணம். இதை இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset