நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி நேற்று முதல் அமல்

புது டெல்லி:  

இந்தியாவில் குறைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நேற்று திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

சுமாா் 375 பொருள்கள் மீதான வரிக் குறைப்பால், அன்றாட பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள் வரை, அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி மாலை 5 மணிக்கு 19 நிமிடம் உரையாற்றினார்.

அதில், இது நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு வேகமூட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈா்க்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-இல் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி குறைப்பால் இந்திய மக்களின் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்படும் என்று அரசு தெரிவிக்கிறது.

ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக மக்களிடம்  ஆண்டு தோறும் ரூ.2.5 லட்சம் கோடியை பெற்று ஒன்றிய அரசு மோசடி செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset