செய்திகள் தமிழ் தொடர்புகள்
காசா மீதான போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் கண்டன பேரணி
சென்னை:
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது.
ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று அறிவித்து, காசா மீதான போரைத் தொடங்கிய இஸ்ரேல் அரசு, தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றுவதுதான் தன்னுடைய நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்து போரை நீட்டித்து வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரைத் தடுக்க வலியுறுத்தி, சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது.
புதுப்பேட்டை லேங்க்ஸ் தோட்டச் சாலையில் தொடங்கிய பேரணி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்எச் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், இந்தியமாதர் தேசிய சம்மேளன செயலாளர் சாந்தி, எஸ்டிபிஐ தேசிய பொறுப்பாளர் தெகலான் பாகவி, இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 11:53 am
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
December 15, 2025, 4:12 pm
அமித்ஷா போன்றவர்களுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?: தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி
December 14, 2025, 7:17 am
UNITED ECONOMIC FORUM - ஐக்கிய பொருளாதார பேரவையின் வர்த்தக மாநாடு
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
