நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் கல்வியமைச்சின் பொறுப்பில் எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன்; இந்திய மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பிறக்குமா?: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன்  கல்வித் திட்டங்களுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்பதால் இந்திய மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பிறக்குமா?.

சிரம்பான் தொகுதி பெர்சத்து  சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இக்கேள்வியை எழுப்பினார்.

அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதில் இந்திய மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக தகுதியான பல மாணவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லை.

அப்படியே கிடைத்தாலும் விண்ணப்பிக்கும் துறை அம்மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

இப்பிரச்சினை நீண்ட கால இழுப்பறியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் எஸ்டிபிஎம், மெட்ரிகுலேசன்  கல்வித் திட்டங்களுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை நியாயமான, வெளிப்படையான பல்கலைக்கழக சேர்க்கை முறைக்கு வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.

நிக் நஸ்மியின் இக்கூற்று உண்மை இருந்தால் அதனை அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்

இதன் வாயிலாக பல ஆண்டுகளாக இந்திய மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கும் என்றால் அதனை உடனே அமல்படுத்த வேண்டும்.

அதே வேளையில் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

குறிப்பாக இந்திய மாணவர்களின் உயர் கல்வி கனவிற்கு அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset